காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
— பேராசிரியர் மு. வரதராசனார்காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துஏதிலர் போல வரும்.
My lover away, evening comes murderously like a hangman rushing to the place of slaughter.
— V.R. Ramachandra Dikshitar (1949)
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் கனத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
— முத்துவேல் கருணாநிதி(இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.
— சாலமன் பாப்பையா