அறத்துப்பால் · குறள் 14 / 1330
2. வான்சிறப்பு

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.

The cultivators would cease to plough were the clouds’ free supply of water to fail.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றிவிடும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்

— சாலமன் பாப்பையா